Velupillai Priraphakaran




1991 ஆண்டு சர்வேதேச பெண்கள் நாளில் தமிழீழ பெண்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் விடுத்த செய்தியில்
 
 
தமிழீழ பெண் சமுகம் எழுட்சிகொள்ளத் தொடங்கிவிட்டது
பெண் விடுதலையை வலியுறுத்தி தலைவர் விடுத்த செய்தி
 
பழமைவாதத்திலும், மூடநம்பிக்கையிலும் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது வேதாந்தங்களும், மத சித்தாந்தங்களும், மனுநீதி சாஸ்திரங்களும் அந்தக் காலம் தொட்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக் இன்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணம் களில் இந்த ஒடுக்குமுறையானது பெண்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையை சிதைத்து வருகிறது.
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் விடுத்த செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அவரது செய்தியின் விபரம் வருமாறு:
 
மகளிர் தினம். முழு உலகமுமே இன்றைய தினத்தை பெண்ணினத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறது. யுகம் யுகமாக ஆணாதிக்க அடக்கு முறையின்கீழ் ஒடுக்கப்பட்டு வந்த பெண்குலம் சம உரி மைக்காக, சமத்துவத்திற்காக, சமூக நீதிக்காக குரலெழுப்பும் புரட்சிகர தினம் இது. பெண் விடுதலையின் வரலாற்றுத் தேவையையும், அவசியத்தையும் இன்றைய தினம் குறித்து நிற்கிறது.
 
இந்தப் பெண் எழுச்சி தினம் தமிழீழம் எங்கும் இன்று கொண்டாடப்படுவதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் :
எமது சுதந்திர இயக்கத்தின் ஆரம்ப காலம் தொட்டேபெண் விடுதலையை ஒரு பிரதான இலட்சியமாக நாம் வரித்துக்கொண்டோம். பென் கள் விழிப்புற்று, எழுச்சி கொண்டு, தமது சொந்த
விடுதலைக்காகவும் போராட முன்வரும்போதுதான் அந் தப் போராட்டம் ஒரு தேசிய போராட்டமாக முழு வடிவத்தைப் பெறும் என்ற உண் மையை நாம் அன்று தொட்டே உணர்ந்திருந் தோம்.
நாம் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு மக்கள் இனம். அந்நிய னின் அடக்குமுறையால் நாம் அழிக்கப்பட்டுவந்த போதும் எமக்குள்ளே , எமது சமூக வாழ்வில் நாம் எம்மவர்களை மோசமான முறையில் அடக்கி யொடுக்கி வருகிறோம். இப்படியாக எம் மத்தியில் நிலவி வரும் ஓர் ஒடுக்குமுறை வடிவம்தான் பெண் ஒடுக்குமுறை, பழமைவாதத்திலும், மூடநம் பிக்கைகளிலும் ஊறிப்போனஎமது சமூக அமைப்பில், நீண்ட நெடுங்காலமாக பெண் ணினம் ஒடுக்கப்பட்டுவருகிறது
 
. எமது வேதாந்தங்களும், மத சித்தாந்தங்களும். மனு – நீதி சாஸ்திரங்களும் அந்தக் காலந்தொட்டே பெண் அடி மைத்தனத்தை நியாயப் படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்குமுறையானது பெண்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையை சிதைத்து வருகிறது.
 
எமது சமூகத்தின் சனத் தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்துவந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசியப்போராட்டமாக முன்னெடுப்பது கடினம்.எமது இயக்கம்பெண் விடுதலையை முதன்மைப்படுத்திமயப்படுத்தி, போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டியது… இவ்வகையில் நாம் தமிழீழ பெண் சமூக மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கிறோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கிறது.
காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப்போயிருந்த தமிழீழப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சீருடை தரித்து நிற்கிறது. எதிரியை களத்தில் சந்திக்க நிற்கிறது.
 
காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து, எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகரசக்தியாக எழுச்சிகொண்டுநிற்கிறது.
 
வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்லுைம் ஆண் களுக்கு எவ்வஈகயிலும் சளைத்தவர்கள் இல்லை என் பதை எமது பெண்போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.ஒரு புதுமைப் பெண்ணை , ஒரு புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது.தமிழீழத்தில் இந்தப் பெண் புரட்சி – தொடரவேண்டும். மேலும் மேலும் புரட்சிப் பெண்கள் எமது விடுதலை
 
 
இயக்கத்தின் பின்னால் அணி திரளவேண்டும். போராட்டத்தின் மூலமாகவே தம் தேச விடுதலையும்,பெண் விடுதலையும்
பெற முடியும்.
 
நாம் ஒரு சாதாரண சூழலில் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழவில்லை. – நாம் ஒரு போராட்ட சூழலில் வாழ்கிறோம். போராடினால் தான் எமக்கு வாழ்வுண்டு. விடிவுண்டு, வருங்காலமுண்டு என்ற ஒரு நெருக்கடியான நிர்பந்ததிற்குள் வாழ்கிறோம் நாம் விரும்பினா விரும்பா விட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும், வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது. இந்த எதார்த்தமான வரலாற்று நிர்ப்பந்தத்திலிருந்து யாருமே தப்பிக் கொள்ள முடியாது. அப்படித் தப்பிக்கொள்ள முனைபவர்கள் தேசாபிமானம் கொண்டவர்கள் அல்லர்.
சுவாலைகள் எல்லோரையும் தீண்டி வருகிறது. ஆண், பெண் என்ற வேறுபாடின்றி, சாதிய வர்க்க வேறுபாடின்றி, சிறி யோர், முதியோர் பான்ற வேறுபாடின்றி எல்லோரையும்தீண்டிவருகிறது. இது எமது இனத்திற்கு எதிராக, எமது இனத்தை அழிக்கும் நோகத்துடன் நடாத்தப்படும் யுத்தம். இந்த யுத்தத்தை நாம் அசட்டைசெய்ய முடியாது. இந்த யுத்தத்திலிருந்து நாம் ஒதுங்கிக்கொள்ளவும் முடியாது. இந்த ‘யுத்தத்தை நாம் துணிவுடன் எதிர்கொள் வதைத்தவிர எமக்கு வேறு வழி இல்லை .
 
நாம் ஒன்றுபட்ட மக்களாக, ஒரே தேசிய சக்தியாக அணி திரண்டு எமது எதிரியின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். மலை போல உறுதியுடன் நாம் ஒன்று குவிந்து நின்றால் எம்மை காத்தகைய சக்தியாலும் அழித்துவிட முடியாது
இத்த தேசிய ஒற்றுமையையும் இன ஒருமைப்பாட்டையும் ஒரு வலுவான் அத்திவாவாரத்தில் கட்டிஎழுப்புவதென்றால் எம் மத்தியில் நிலவும் எந்தத் தாழ்வுகள் அழிக்கப்பட வேண்டும். சமூக முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். சமூக அநீதிகள் அழிக்கப்பட வேண்டும் ஆண் பென் என்ற பாலியல் அடிப் படையில் தோற்றம் கொண்டபாரபட்சங்கள் அகற்றப்பட வேண்டும்.
 
அனைத்து தமிழ் மக்களும். ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்குகொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றிபெறுவது நிச்சயம்.
 
சமத்துவத்தின் அடிப்படை யில் ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதே எமது போராட்ட இலட்சியம் பெண்கள் சம உரிமைபெற்று, சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று, ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகரமான சமுதாயமாக தமிழீழம் அமையவேண்டும் என்பதே எனது ஆவல்,
பெண்களின் எழுச்சித்தினமாகிய இன்று உலகப் பென்ணினத்தின் உரிமைப் போராட்டங்களுக்கு எனது ஆதரவையும், ஆசியையும் தெரிவித்துக் கொள்கிறேன்,இவ்வாறு அவர் தனது அறிக்கையில் – தெரிவித்துள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave A Comment