Velupillai Priraphakaran

பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் சனாதிபதி ஜெ . ஆர் . ஜெயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம்  என்று ஜெ . ஆர் . ஜெயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தலைவர் பிரபாகரனோ வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது, இரண்டை நாலாக கூறுபோடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?

என்று கூறி நிராகரித்து விட்டார்.

அத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான், தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக ஜெ . ஆர் . ஜெயவர்த்தனா இந்திய அரசுக்கூடாக தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் – இது ஒரு மாயவலை, தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை. அதிகாரங்கள் எதுவுமற்ற, நினைத்தால் சனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாத பொம்மைப் பதவிதான் முதல் மந்திரிப் பதவி – என்று கூறி அதனைத் தூக்கி எறிந்துவிட்டார்.

Leave A Comment