Velupillai Priraphakaran

“பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி.

“பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை” – லண்டன் BBC தமிழ்ஓசையின் மூத்த செய்தியாளர் ஆனந்தி! விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் நீங்கள்தான். அந்த சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்! லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்துவிட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு […]
Read more

தலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி

தலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்​பாணம் மீது ஜெயவர்த்​தனாவின் விமானங்கள் வெறித்த​னமாகக் குண்டுகளை வீச… சிங்களவர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது. இருப்பினும், தொடர்ந்து விடுதலைப்புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள இராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது. விடுதலைப்புலிகளால் சகல வசதி​களோடு இருக்கும் சிங்கள இராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியுமா? […]
Read more

தலைவர் அளித்த துல்லியமான பதில்கள்.!

மார்ச்சு மாதம் 1984ல் சந்தித்து பேட்டி எடுத்த அனிதா பிரதாப் கேட்ட சில கேள்விகளும் தலைவர் அளித்த துல்லியமான பதில்களும் 1.கேள்வி : சிங்கள இராணுவத்தின் கரங்களில் பிடிபடுவதைவிட மரணமடைவது மேலானது என்று கருதுகிறீர்களா ? பதில் : உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதை கெளரவமாக சாவதையே விரும்பிக்றேன். 2. கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஏன்? அவர்களைத் துரோகிகள் என நினைக்கிறீர்களா ? பதில் […]
Read more

சுதுமலைப் பிரகடனம்.!

சுதுமலைப் பிரகடனம்.! இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் […]
Read more

தலைவரின் ஒப்புதல் இன்றிஇந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்.!

இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்.! 1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றி, தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போரை வழிநடத்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் ஒப்புதல் இன்றி அவரை டில்லியில் ஹொட்டலில் பூட்டி வைத்துவிட்டு, பிராந்திய வல்லரசு என்ற இறுமாப்புடன் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சிறீலங்காப் பிரதமர் ஜெ.ஆர். ஜெயவர்த்தனாவுடன் இந்தியாவின் பூகோள நலனுக்கான […]
Read more