Velupillai Priraphakaran

கரும்புலிகள் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர்

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப்பாதையின் தடைநீக்கிகள் – எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள். பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே, கரும்புலிகளை நான் உருவாக்கியுள்ளேன். மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லா தொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள். இது கரும்புலிகள் சகாப்தம். இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க்கோலம் பூண்டுவிட்ட காலம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் […]
Read more

மாவீரர்கள் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர்

நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம் அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல் அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு; ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு […]
Read more

விடுதலைப் போராட்டமும் விடுதலைப்புலிகளும்

விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல்விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள். குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி – தன்மானத்துடன் -வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும். நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச் சின்னம்தான் |சயனைட்|. இந்த |சயனைட்| எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். இராணுவ ஆதிக்கத்திற்கும் […]
Read more

மொழி ̧ கல்வி, கலை மற்றும்பண்பாடு தமிழீழத் தேசியத் தலைவர்

கலை இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத்தூண்டவேண்டும் பழமையிலும் – பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும். இந்தப் படைப்புக்கள் எமது புனித விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டுவதாக அமைய வேண்டும் சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும். போரும் – கல்வியும் […]
Read more

மக்கள் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர்

அரசியல் என்பது மக்கள்மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி; மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு . இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள். சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம், பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் அத்தகைய இனத்தால்தான் சுதந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும். அரசியல் என்பது மக்கள்மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. […]
Read more