Velupillai Priraphakaran

தமிழீழ மண்

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து,வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை […]
Read more

மானுட வாழ்வு

தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது. மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது. இந்த முடிவில்லாத இயக்கத்தில், உலகத்து மனிதன் நிறையவே […]
Read more

மாவீரர் நாள் உரையிலிருந்து

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள். எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத […]
Read more

உந்து சக்தி

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; கோழைத்தனத்தின் தோழன் உறுதிக்கு எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணப்பயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்றுவிடுகிறான் அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும், வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது. மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது. நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும். ஒரு உயிர் உன்னதமானது […]
Read more

பெண் விடுதலை குறித்து தமிழீழத் தேசியத் தலைவர்

பெண்விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை. பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் – பெண்மை பற்றிய அவர்களது கருத்துலகில் – ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை. மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது; அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது. அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை; தமிழீழத்தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் […]
Read more