Velupillai Priraphakaran

பெண்விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.


பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் – பெண்மை பற்றிய அவர்களது
கருத்துலகில் – ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.
மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது; அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது.


அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை; தமிழீழத்தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.
நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம் தமிழர்; வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.


பெண் விடுதலை என்பது, அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதாரச்சுரண்டல்முறைகளிலிருந்தும் விடுதலை பெறுவதாகும்.


ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது,ஆண்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்.


பெண்கள் சம உரிமை பெற்று – சகல அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாக – கௌரவமாக – வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமையவேண்டும் என்பதே எனது ஆவல்.


ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் – கௌரவத்தையும் மதித்து,
குடும்ப வாழ்வின் பொறுப்புக்களைப் பகிர்ந்து, சமூகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக்கொண்டு வாழ்ந்தால், இந்தப் பால்வேறுபாட்டால் எழும் பல்வேறு முரண்பாடுகள் நீங்கும்.


வீரத்திலும் – தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண்போராளிகள், தமது வீர சாதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.


காலங்காலமாக மனவுலக இருட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும் விழிப்புத்தான் அவர்களின் விடுதலைக்கு முதற்படி.


தலைவிதி என்றும், கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும், பழமை என்றும், காலங்காலமாக மனவுலக இருட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்.
எமது விடுதலை இயக்கத்துடன் இணைந்துகொள்வதன் மூலமே,பெண்ணினம் தனது விடுதலை நோக்கிய இலட்சியப் பாதையில் வெற்றிபெற முடியும்.


எமது இனத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில்வாழ்ந்துவந்தால், எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசியப்போராட்டமாக முன்னெடுப்பது கடினம்.


மகளிர் படைப்பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று என்பதை, நான் பெருமிதத்துடன் கூற முடியும்.
பெண்கள் விழிபுற்று, எழுச்சி கொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராடமுன்வரும்போதுதான், அந்தப் போராட்டம் ஒரு தேசியப் போராட்டமாக முழுவடிவத்தைப் பெறும்.


ஒரு புதுமைப் பெண்ணை – புரட்சிகரப் பெண்ணை – எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கின்றது.விழிப்படைந்து எழுச்சிகொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்ட சக்தியாக உருப்பெற முடியும்.பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூகவிடுதலையைப் பெற்றதாகக் கூறமுடியாது.


பெண் விடுதலையே சமூக விடுதலையை முழுமை பெறச் செய்கிறது. பெண்கள் சுதந்திரமாக, கௌரமாக, சமத்துவமாக வாழவழிசெய்யும் ஒரு மக்கள் சமூகமாக இருக்க முடியும் அந்தச் சமுகமே உயரிய பண்பாட்டின் உன்னத நிலையை அடையமுடியும்.


சமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.
பெண் ஒடுக்குமுறை என்பது ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினை; நீண்ட நெடுங்காலமாக, எமது பண்பாட்டு வாழ்வில் ஆழப் புரையோடி நிற்கும் சமூகக் கொடுமை. இந்தச் சமூக அநீதியை வேரோடு பிடுங்கி எறிய எமது இயக்கம் உறுதி பூண்டு நிற்கிறது.
பெண் அடிமைத்தனத்திற்கு எதிராகப் பெண்களே போர்க்கொடி உயர்த்தவேண்டும் போராடவேண்டும்.

Leave A Comment