Velupillai Priraphakaran

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; கோழைத்தனத்தின் தோழன் உறுதிக்கு எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணப்பயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்றுவிடுகிறான் அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.


நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும், வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது.
மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.


நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.


ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.


நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள்.


சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.


உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது: தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கிறது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியிருக்கின்றது.


ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதபலமோ அல்ல: அசைக்கமுடியாத மனவுறுதியும், வீரமும், விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.


நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள்நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும்போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும் ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.


எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக்கண்டு பிடித்து, அதற்கேற்ற விதத்தில் துணிகரமானநடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கிறது. அசுர பலங்கெண்ட  கோலியாத்தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.


போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
அறப்போரிலும் சரி, ஆயுதப்போரிலும் சரி, எமது விடுதலைப்போர் உலக சாதனைகளைப் படைத்துவருகின்றது. மனித ஈகையின் சிகரத்தை எட்டியிருக்கின்றது.


இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன், எமது போராட்டத்தில் இந்திய இராணுவம் தலையீடு செய்தது, ஒரு இருண்டு அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்.


எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை; எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம் அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தை கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.


சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும், தன்மானம் இழந்து தலை குனிந்து வாழவேண்டும்,பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும், படிப்படியாக அழிந்து போகவேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.


சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.
இன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது.
ஏதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்.


இந்த உலகில் அநீதியும் – அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும்வரை, விடுதலைப்போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.


இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி, தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவதுதான் சுதந்திரம்.


இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம் சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புக்களும் – அழிவுகளும் எமது ஆன்மஉறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிடமுடியாது.


தொடரான பூகோள நிலப்பரப்பையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்ட வட – கிழக்கு மாகாணங்கள் அடங்கிய மாநிலத்தையே தமிழர் தாயகம் எனக் குறிப்பிடுகின்றோம். இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற தமிழ்பேசும் மக்களின் குடிநிலமாகும். இதனைப் பிரித்துக் கூறுபோட முடியாது.


இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில்,வெற்றி – தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான்அலட்டிக்கொள்ளவில்லை இந்த யுத்தத்தை எதிர்கள்ளும் உறுதியும் – துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியேசிந்தித்தேன்.


தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும்விட்டுக்கொடுப்பதில்லை.


இந்திய – இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் – அதற்குத் தலைமை தாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக்கட்டுவதுதான், இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்.


திலீபனின் தியாகம் இந்திய மாயையைக் கலைத்து தமிழீழ தேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.


நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி.


நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை; ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.


சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்க வேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.


போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்ய வேண்டும்.
விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக – உயிர்மூச்சாக – இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சக்தியும் அதுவே.


சாவையும், அழிவையும், துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுதந்திரம் எனும் சுவர்க்கத்தை நாம் காண முடியும்.


எனது மக்கள் பற்றியும், எனது தேசம் பற்றியும், எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
சுதந்தரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது.


மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.
புவியியல் ரீதியாக தமிழீழத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம்பொருந்தியவர்களாகி, எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து, எமது கடலில் நாம் பலம்பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நிலப்பகுதியை நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்ளுவதுடன், தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.


விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.


உலகவரலாற்றில் எங்கும் எப்பொழுதும் – நிகழாத அற்புதமான தியாகங்களும் – அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன.


இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை; ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையேமுதன்மைப்படுத்துகின்றது, மனித உரிமை, மக்கள் உரிமை என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார – வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கமைப்பை நிர்ணயிக்கின்றன.


சமூக நிர்வாகத்தில் நீதித்துறை பிரதானமானது. நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கொண்டவர்களே நீதி பரிபாலனத்தைக் கையாள வேண்டும்.
சமத்துவமும் நீதியும் மனிதாபிமானமும் தழைத்தோங்கும் ஒரு புதிய சமுதாயமாக தமிமீழத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்பதே, எமது இலட்சியம். இந்தப் புதிய இலட்சியத்துடன் உருவாக்கம் பெறும் ஒரு சமூக அமைப்பில், நேர்மையும் ஒழுக்கமும் இல்லாத மனிதர்கள் நிர்வாகத்துறையில் புகுந்து சமூகத்தைச் சீரழிக்க நாம் அனுமதிக்க முடியாது.


தார்மீக அடிப்படையில் நாம் உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது; சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசு அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது.


விடுதலைப் போராக வீசிக்கொண்டிருக்கும் வரலாற்றுப் புயல், எமது மண்ணில் காலங்காலமாக நிலைத்திருந்த பழமைவாத விருட்சங்களை வேரோடு பிடுங்கி வீழ்த்திவருகின்றது, எமது மனக்குகையில் குடியிருந்த மூட நம்பிக்கைப் பேய்கள் விரட்டப்பட்டு வருகின்றன் எமது சமூகக் கருத்துலகில் புதிய பார்வை மலர்கிறது; புதிய விழிப்புணர்வு தோன்றிவருகின்றது; சமூக உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.


கொண்ட கொள்கையில் நம்பிகையும், அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின்நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடமுள்ளவரை, எமது இலட்சியப் பயணம் வெற்றியில் முடியுமென்பது நிச்சயம்.


இழப்புகளுக்கு அஞ்சினால் யுத்தம் நடாத்த முடியாது; இழப்புகளை வளர்ச்சியின் ஊன்றுகோலாகக் கருத வேண்டும்.


நாம் இனத்துவேசிகள் அல்லர் போர்வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர் நாம் சிங்கள மக்களைஎதிரிகளாகவோ, விரோதிகளாகவோ கருதவில்லை. சனநாயக அரசியல் மரபிற்கு நாம் விரோதமானவர்கள் அல்லர் எமது மக்களின் அடிப்படையான சனநாயக அரசியல் உரிமைகளுக்காகவே நாம் போராடி வருகின்றோம்.


சமூக நீதியும் சனநாயக சுதந்திரங்களும் தழைத்தோங்கும் ஓர் உன்னத சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே, எமது அரசியல் இலட்சியமாகும்.


தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்துபோன ஒரு வீர மரபு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது.


எமது மக்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும் நிலைநாட்டவே நாம் ஆயுதங்களை எந்தினோம் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் நிலைநாட்டப்படாதவரை எமது போராட்டம் தொடரும் என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன்.


என்றோ ஒருநாள், எதிரியானவன் எமது சமாதானக் கதவுகளைத்தட்டுவானாக இருந்தால், நாம் எமது நேசக்கரங்களை நீட்டத் தயாராக இருக்கின்றோம்.


சிங்களப் பயங்கரவாதமானது எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.


உலகில் எந்த ஒரு தேசிய சமுதாயமும் இரத்தம் சிந்தாமல், வியர்வை சிந்தாமல், அளப்பரிய தியாகங்கள் செய்யாமல்,பேரழிவுகளைச் சந்திக்காமல் சுதந்திரம் பெற்றது கிடையாது.


நாம் தனித்துநின்று இந்தியத் தலையீட்டை எதிர்த்தோம் நாம் தனித்துநின்று உலகின் மிகப் பெரிய இராணுவத்தை எதிர்த்தோம் நாம் தனித்துநின்று எமது தேசிய சுதந்திரத்தீயை அணையவிடாது போராடினோம் இறுதியில் நாம் வெற்றிகொண்டோம். இந்த வெற்றிக்குக் காரணம் எமது மனந்தளராத உறுதி; சாவுக்கு அஞ்சாத எமது வீரம் சத்தியத்திலும் தர்மத்திலும் எமக்குள்ள நம்பிக்கை.


நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது


தென்னிலங்கைச் சமூகக் கட்டமைப்பின் சகல மட்டங்களிலும் பூதாகரமாக வளர்ந்துவரும் சிங்கள பௌத்த பேரினவாதம், தமிழ் மக்களை காருணியத்துடன் அரவணைத்துக் கொள்ளும் என நம்பவில்லை. சிங்கள தேசம் இனவாதப்பிடியில் இருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை தொடருமானால் நாம்பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை.


வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தி அல்ல அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்து விடும் சூத்திரப்பொருளும் அல்ல, வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு மனிதனே வரலாற்றைப் படைக்கிறான். மனிதனே தனது தலைவிதியையும் நிர்ணயிக்கிறான்.


கட்டி எழுப்பப்படவுள்ள தமிழீழத்தின் வளர்ச்சிக்கு ஆயுதத்தை மட்டும் நம்பியிராமல், அனைத்துத் துறைகளிலுமே வளரவேண்டும் என்பதில் நான் அக்கறையாக உள்ளேன்


இலங்கையில் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே, பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது.


ஆயுதம் தாங்கிய புரட்சிவாதியாகவே நான் அரசியலில் புகுந்தேன்.


எமது தாயக மண்ணில், வரலாற்றுரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவமாக,பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள் இதுவே எமது தேசத்தின் அபிலாசை.


உயிரோடு எதிரிகளின் கைகளில் பிடிபடுவதைவிட கௌரவமாகச் சாவதை விரும்புகிறோம்.
எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும், எதிரியானவன் தனது இயலாத் தன்மையால் வெகுசனம் மீது மூர்க்கமாகப்பழிதீர்த்துக்கொள்ளத் தயங்குவதில்லை.


தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை; அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக, எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும், உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும், நாம் எதிர்பாராமல் இருக்கவில்லை. இந்தச் சவால்கள்
எழுந்த போதெல்லாம் நாம் அதைத் துணிந்து எதிர்கொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும், நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை; ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.


சிங்களப் பேரினவாதத்தின் தீவிரவாதப் போக்கில் மாற்றம் ஏற்படும் என நான் என்றுமே நம்பியதில்லை சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தழிழீழ மக்களுக்குத் திறந்துவைக்கிறது; அந்தப் பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை.


சமூக உறவுகளில் அடிப்படையான மாற்றத்தை நிகழத்துவதன் மூலமே, சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறை வடிவங்களைஒழித்துக்கட்டி, சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலை நிறுத்த முடியும்.


தமிழீழம் ஒரு செழிப்பான பூமி; வளங்கள் பல நிறைந்த தேசம் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, அதனை அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்லக்கூடிய நீர் வளத்தையும்இ நிலவளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது.இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனங்கண்டு, அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும்வகையில், திறமையான திட்டமிடுதலின் அடிப்படையில், உற்பத்தியைப் பெருக்கவேண்டும்.


சமூக மாற்றத்திற்கு முதற்படியாக சமூக விழப்புணர்வு அவசியம்.
தேச விடுதலை என்பது எல்லாரது விடுதலையையும் விடிவையும் குறித்து நிற்கும் ஒரு பொதுவான குறிக்கோள் ஒரு தேசிய இலட்சியம். இந்த இலட்சியத்தில் எல்லாரும் பங்குகொள்ளும்பொழுதுதான் தமிழரின் சுதந்திர இயக்கம் வலுமிக்க சக்தியாக உருப்பெறும்.


வேளாண்மையும் கைத்தொழிலுமே எமது பொருண்மியக் கட்டுமானத்திற்கு அடித்தளமானவை; தன்னிறைவான பொருளாதார வாழ்வுக்கு ஆதாரமானவை.


தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையும் தெளிவும் உண்டு; எமது நிலைப் பாட்டை எமது எதிரி மட்டுமன்றி, முழு உலகமும் நன்கறியும்.


தன்னிறைவான பொருளாதாரம் எமது தேசிய வாழ்வுக்கு மூலாதாரமானது; தனியரசு நிர்வாகத்திற்கு அத்திவாரமானது.


உண்மையில் எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை; எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில் எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நீதியும் நியாயமும் எமது பக்கமாக இருந்தால் மட்டும் போதாது; நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் போராடும் திறமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் தளராத உறுதி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.


சுயநிறைவான, தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம் மக்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடைய சனநாயாக ஆட்சிமுறையையே நான் விரும்புகின்றேன். இந்தப் புதிய சமூகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும்.


எத்தனை தடைகள் ஏற்பட்டபோதும் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டபோதும் கொண்ட கொள்கையில் நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின் நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடம் உள்ளவரை, எமது இலட்சிய பயணம் வெற்றியில் முடியும் என்பது நிச்சயம்.


எதிரி ஈவிரக்கமற்றவன், போர் வெறிகொண்டவன் எமது தாயகத்தைச் சிதைத்து, எமது இனத்தை அழித்துவிடுவதையே இலட்சியமாகக் கொண்டவன். அவனது இதயக் கதவுகள் திறந்து எமக்கு நீதி கிடைக்குமென, நாம் எதிர்பார்க்க முடியாது.


எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிற்பதால் மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்துகொடாமல் எம்மால் தலைநிமிர்ந்து நிற்க முடிகின்றது.


அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தைவிட, பொதுமக்களின் ஆன்மீக உறுதியை உடைக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
இந்தியாவின் இராணுவத் தலையீடும் அதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவுகளும், தமிழீழ மக்களுக்கு ஒரு நல்ல பாடத்தைப் புகட்டியுள்ளது. அதாவது நாம் எந்த அந்நிய சக்திகளிலும் தங்கியிராது, எமது உரிமைகளை நாமேபோராடிவென்றெடுக்கவேண்டும் என்பதுதான் இந்தப் பாடம்.


எதிரியிடம் ஆயுத பலம் உண்டு – ஆட்பலமுண்டு – ஆதரவளிக்கும் நாடுகளுண்டு. நாம் தனித்துநின்று போராடுகின்றோம் எமக்கு எந்த நாட்டின் உதவியுமில்லை; ஆனால் எமக்குள்ள ஒரேயொரு பலம் எமது ஆத்ம பலம் தான்.


உலகத்தில் எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமலும் தியாகங்கள் புரியாமலும் சுதந்திரம் பெற்றதில்லை.


போராட்டத்தின் யதார்த்த நிலையை – புறநிலை உண்மைகளை – மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன், மக்களிடையே தேசிய விழிப்புணர்வையும் விடுதலை உணர்வையும் ஊட்டி வளர்த்து மக்களின் கருத்துலகைக் கட்டிவளர்ப்பதில், மக்கள் தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்.


ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.


கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் படிப்படியாக நிலைப்படுத்தி, மக்களின் பங்களிப்போடு விரிவுபடுத்தி வெகுசன யுத்தமாகப் பரிணாமம் பெறச்செய்யும் கொள்கைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, நாம் இந்தப் போராட்ட வடிவத்தை முன்னெடுத்து வருகின்றோம்.


நாம் துணிந்து போராடுவோம்…..சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.


தாயக விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் தெரிவிற்கும் கல்விகற்கும் உரிமைக்கும் இடையில், நாம் என்றுமேமுரண்பாட்டைக் கற்பிக்க முயலவில்லை இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமையாதவை.


தமிழ் – சிங்கள பாட்டாளிகள் மத்தியில் வர்க்க ஒருமைப்பாடு ஏற்படுவதனால், தமிழரின் தன்னாட்சி உரிமையை சிங்களத் தொழிலாள வர்க்கம் அங்கீகரிக்க வேண்டும்.


ஆயிரமாயிரம் போராளிகளின் அற்புதமான தியாகத்தில் உருவாகி வரும் எமது தாயகத்தை, ஒரு உன்னதமான – மேன்மையான – சமுதாயமாக மாற்றியமைக்க வேண்டும்.


நாம் உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம். எமது தாயக பூமியை எதிரியிடமிருந்து மீட்டெடுத்து சுதந்திர தமிழீழம் அமைக்கும்வரை, நாம் தொடர்ந்து போராடுவோம்.


தங்களுடைய உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த தேசிய இராணுவத்தின் உதவியுடன், சுதந்திர தமிழீழ நாடு நிறுவப்பட்டால் ஒழிய, ஒருபோதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.


சிங்களப் பாட்டாளி வர்க்கத்திற்கு நாம் எமது நேசக்கரத்தை நீட்டி நிற்கின்றோம். சிங்கள ஆளும்வர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டுவரும் சிங்களப் பாட்டாளி மக்களை நாம் ஒரு நேச சக்தியாகவே கருதுகின்றோம்.


ஆயுதங்கள் மட்டும் முக்கியமல்ல தந்திரங்களும் – உபாயங்களும் முக்கியம்.


பேரினவாதச் சித்தாந்தப் பிடியிலிருந்து விடுதலை பெற்று விழிப்புணர்வு அடையும்பொழுதுதான், தமிழரின் சுதந்திரப் போராட்டத்தின் புரட்சிகரத் தன்மையைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்வார்கள்.


பலம்வாய்ந்த ஒரு எதிரியைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அவனது மனோவுறுதியை உடைத் தெறிந்து, அவனது ஆயுதபலத்தை அழிப்பதற்குக் கெரில்லாப் பாணியிலான போர் முறையே தலைசிறந்த யுத்த தந்திரோபாயமாகும்.


ஆக்கிரமிப்பாளர்களின் சுவடுகளை இந்த மண் ஒரு பொழுதும் சுமந்துகொள்ளாது என்பதை, எதிரிக்கு நாம் நன்குஉணர்த்திவருகின்றோம்.


தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு ‘தேசிய மக்கள் படையாக, நாங்கள் எங்கள் போரை முன்னெடுத்துச் செல்கின்றோம்.


நாம் போராடி இரத்தம் சிந்தி எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் எமக்கு வேறுவழியில்லை. ஒன்று, அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழவேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி.


இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஒரு சமாதான உடன்பாடு என வர்ணிக்க முடியாது; அது ஒரு யுத்த உடன்பாடு.


மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது; உலக வரலாறு பகரும் உண்மை இது.


இந்திய இராணுவம் ஒரு கையை பின்னால் கட்டியபடி போராடியது என இந்தியா கூறுவது கேலிகூத்தானது. ஒரு கையைப் பின்னால் கட்டியபடி இந்திய இராணுவம் எமது மக்கள் மீது இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள் என்றால், இரு கைகளாலும் எத்தகைய அட்டூழியங்களைப் புரிந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றது.


என் வாழ்க்கையில் விரத்தி ஏற்பட்ட கணம் என்று எந்த ஒன்றையும் குறித்துச் சொல்லமுடியாது. இலட்சிய நோக்குக் கொண்டவர்கள் என்று நான் நினைத்து நம்பிய சில நண்பர்கள் சுயநலச் சந்தர்ப்பவாதிகளாக மாறியபோது, நான் மிகுந்த கவலைக்குள்ளானதுண்டு.


போராட்ட பளுவை ஒரு தோளிலும், பொருளாதாரப் பளுவை மறுதோளிலுமாக, உறுதி தளராது சுமந்து நிற்கும் தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்.
நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது


தென்னிலங்கைச் சமூகக் கட்டமைப்பின் சகல மட்டங்களிலும் பூதாகரமாக வளர்ந்துவரும் சிங்கள பௌத்த பேரினவாதம், தமிழ் மக்களை காருணியத்துடன் அரவணைத்துக் கொள்ளும் என நம்பவில்லை. சிங்கள தேசம் இனவாதப்பிடியில் இருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை தொடருமானால் நாம்
பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை.


வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தி அல்ல அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்து விடும் சூத்திரப்பொருளும் அல்ல, வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு மனிதனே வரலாற்றைப் படைக்கிறான். மனிதனே தனது தலைவிதியையும் நிர்ணயிக்கிறான்.


எமது தாயக மண்ணில், வரலாற்றுரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள் இதுவே எமது தேசத்தின் அபிலாசை.


உயிரோடு எதிரிகளின் கைகளில் பிடிபடுவதைவிட கௌரவமாகச் சாவதை விரும்புகிறோம்.


எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும், எதிரியானவன் தனது இயலாத் தன்மையால் வெகுசனம் மீது மூர்க்கமாகப் பழிதீர்த்துக்கொள்ளத் தயங்குவதில்லை.


அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும், நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை; ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.
சிங்களப் பேரினவாதத்தின் தீவிரவாதப் போக்கில் மாற்றம் ஏற்படும் என நான் என்றுமே நம்பியதில்லை சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தழிழீழ மக்களுக்குத் திறந்துவைக்கிறது; அந்தப் பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை.


Leave A Comment